Chat on WhatsApp with +91 98945 66321
Continue to Chatஅன்புள்ள சகோ. பால் தினகரன், Praise the Lord Jesus. கிறிஸ்தவ விசுவாசிகள் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதரத்துவ புரிதலோடு ஒற்றுமையாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர் சககிறிஸ்தவரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக திருமணங்களில், *"நீங்கள் எங்கள் ஜாதி இல்லை; நீங்கள் புறஜாதி, கீழ்ஜாதி; ஆகவே, எங்கள் மகன் உங்கள் மகளை* அல்லது *எங்கள் மகள் உங்கள் மகனைத் திருமணம் செய்யமுடியாது"* என்று சொல்லி *சக விசுவாசிகளை* நிராகரிக்கின்றனர். கிறிஸ்துவின் அன்புச் சட்டப்படி இது ஏற்புடையதல்ல என்று விசுவாசிக்கிறேன்.